[X] Close

ஹாட்லீக்ஸ் : தினகரன் வழி தனி வழி


hotleaks-ttv

டிடிவி.தினகரன்

  • kamadenu
  • Posted: 26 Feb, 2019 12:02 pm
  • அ+ அ-

அனைத்துக் கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசிக்கொண்டிருக்க... டிடிவி தினகரனோ தனது கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு பயிற்சி வகுப்பு நடத்திக்கொண்டிருக்கிறார். 

சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கும் இந்தப் பயிற்சி வகுப்பில், வாக்குச் சேகரிக்கும் முறை, வாக்காளர்களை அணுகும் விதம், எதிரணியின் பிரச்சாரத்துக்கு நாகரிகமாக பதில் கொடுக்கும் விதம் குறித்தெல்லாம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள், பத்திரிகை ஆசிரியர்கள், மனநல மருத்துவர்கள் உள்ளிட்டோரைக் கொண்டு இந்தப் பயிற்சிப் பட்டறையை நடத்திக்கொண்டிருக்கிறார் தினகரன்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close