[X] Close

உண்மையான மக்களாட்சியை காட்டுவோம்: நெல்லையில் கமல்ஹாசன் உறுதி


kamal-hassan

  • kamadenu
  • Posted: 25 Feb, 2019 11:29 am
  • அ+ அ-

உண்மையான மக்களாட்சியை காட்டுவோம் என்று, பாளையங்கோட்டையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாபொதுக்கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். பொருளாளர் சுகா தலைமை வகித்தார். கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம்கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:

திருநெல்வேலி அல்வாவுக்கும், அரிவாளுக்கும் பெயர் பெற்றது. இதுவரை உங்களுக்கு அல்வா கொடுத்தவர்களுக்கு தேர்தலில் நீங்கள் அல்வா கொடுக்க வேண்டும். இங்கு இருக்கும் பொறுப்பாளர் கள் நாளைய தமிழகம். மய்யம் என்பதை கிண்டல்செய்தவர்கள், இன்று மய்யம் என்றால் என்ன என்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர். நான் மாணவர். கற்கவும் சாதனை செய்யவும் வந்துள்ளேன்.

தமிழகத்தில் பலதுறைகளில் சாதனை படைத்தவர்கள் உள்ளனர். அவர்களை வெளியே வர விடாமல் அடக்கி வைத்திருந்த ஆட்சியை வெளியேற்ற வேண்டும். அதை மாற்றத்தான் வந்துள்ளேன். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பில் விருப்ப மனு பெறப்படுகிறது. யார் வேண்டுமானாலும் விருப்ப மனு அளிக்கலாம். சிறந்தவர்களை நீங்களே பரிந்துரை செய்ய வேண்டும்.

37 ஆண்டு காலமாக நற்பணி செய்த கூட்டம் இது. உண்மையான மக்களாட்சி என்றால் என்ன என்பதை நாங்கள் காட்டுவோம். மக்களை காக்க வேண்டும் என்பதை மறந்த ஆட்சிகள் மாறிமாறி வந்துள்ளன. அதை மாற்றவேண்டும். இது வரை ஆட்சிசெய்தவர்கள் சொத்து சேர்த்தார் கள். உண்மையான சொத்து மக்கள் தான் என்பதை மறந்து விட்டனர்.

கூட்டத்தை கலைக்க எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு விதிமுறைகள் உள்ளன . ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாது வாயில் குறி பார்த்து சுட்டவர்களுக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். உங்கள் கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். ஜாதியை கலையும் சமத்துவம் காப்போம், கல்வியில் சர்வதேச தரம் எய்துவோம், தொன்மையைப் போற்றுவோம், வேலைவாய்ப்பை பெருக்கி ஏழ்மையை அகற்றுவோம். இதை விடவேறு என்ன கொள்கை வேண்டும்.

தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பதாக கூறுகிறார்கள் இவ்வளவு பேரை வறுமைக்கோட்டுக்குக் கீழ் வைத்திருப்பதற்கு வெட்கமாக இல்லையா? நான் தேர்தலில் தனியாக நிற்பதாக கூறுவது மூடத்தனமானது.

மக்களோடு நிற்கிறேன் நான் யாரிடமும் சென்று சீட் கேட்கவில்லை. நின்று அடிப்பவனுக்கு சீட் எதற்கு. தேர்தலில் சீட்டுக்காக பல்வேறு பேரங்கள் நடக்கின்றன இந்த அசிங்கமான அரசியல் வியாபாரத்தை சரி செய்தே ஆகவேண்டும். என்னை பார்த்து பாஜகவின் பி டீம் என்கின்றனர் இது போன்ற கெட்ட வார்த்தைகள் பேசினால் சரியான பதிலடி கொடுப்பேன். நாங்கள் யாருக்கும் பி டீம் அல்ல. இதுதான் தமிழகத்தின் உண்மையான ஏ டீம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக காஷ்மீரில் வீரமரணமடைந்த கோவில்பட்டி அருகேசவலாப்பேரியை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் வீட்டுக்கு கமல்ஹாசன் சென்று,அவரது மனைவி கிருஷ்ணவேணி, தந்தை கணபதி மற்றும்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close