[X] Close

தினகரன் விரும்பினால் கூட்டணிக்கு தயார்: கருணாஸ் எம்எல்ஏ தகவல்


karunas

  • kamadenu
  • Posted: 25 Feb, 2019 08:42 am
  • அ+ அ-

தினகரன் விரும்பினால் கூட்டணிக்கு தயார் என முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கழகங்கள் இல்லாத தமிழகம் என்று கூறி வந்த பாஜகவும், கடந்த மாதம் வரைதமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி ஆளுநரிடம் மனு அளித்த பாமகவும் அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டிய அவசியமென்ன?.

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரைவைக்காவிட்டால், வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய, மாநில அரசுகளுக்கு முக்குலத்தோர் சமுதாய மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள். தினகரனின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல், அனைத்து அரசியல் கட்சிகளும் அவரை பலவீனப்படுத்த நினைக்கின்றனர். அவரை பாஜக அரசுசிறைக்கு அனுப்பாமல் இருந்திருந்தால் அவர் அரசியலுக்கே வந்திருக்க மாட்டார்.

தினகரன் விரும்பினால், மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைக்க தயாராக உள்ளேன். இருப்பினும், நான் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளதால், மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை செய்து, முக்குலத்தோர் புலிப்படையின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து வரும் 27-ம் தேதி சென்னையில் நடக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close