[X] Close

இந்தியாவில் வாழ்பவர்கள் பாகிஸ்தான் மொழியில் பேசுவதா? - பிரதமர் மோடி கண்டனம்


modi

  • நெல்லை ஜெனா
  • Posted: 23 Feb, 2019 20:57 pm
  • அ+ அ-

 

ஜெய்ப்பூர்

இந்தியாவில் வாழும் சிலர் பாகிஸ்தானின் மொழியில் பேசுவதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி ஜெய்ஷ் -இ -முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் கல்வி, பணி, மற்றும் வியாபாரம் நிமித்தமாக தங்கி இருக்கும் காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, மிரட்டல் விடுப்பது போன்ற சம்பவங்கள் நடந்தன.

இதனால், காஷ்மீரைச் சேர்ந்த மக்கள், தங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இடங்களை விட்டு, மீண்டும் காஷ்மிருக்கும் திரும்பினார்கள். இந்த சம்பவம் காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலையும் ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்த நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் டோங்க் தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘தீவிரவாதத்துக்கு எதிராக நாம் போரிட்டு வருகிறோம். மனிதநேயத்துக்கு எதிரானவர்களுடன் தான் நமது போராட்டம். காஷ்மீருக்காக தான் போராடுகிறோம். காஷ்மீருக்கு எதிராக அல்ல. காஷ்மீர் மக்களுக்கு எதிராக அல்ல.

காஷ்மீர் இளைஞர்களுக்கு எதிராக சமீபகாலமாக நடந்து வரும் சம்பவங்கள், சிறிதோ, பெரிதோ ஆனால் அதனை ஏற்க முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாது. காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

பாகிஸ்தானுக்கு சென்று வந்த இவர்கள் எதையும் செய்யவில்லை,  மோடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்கிறார்கள். மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களை பற்றி இவர்கள் எந்த விமர்சனத்தையும் வைப்பதில்லை’’ எனக் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close