[X] Close

5 ஆண்டு ஆட்சியில் வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு


congress

  • நெல்லை ஜெனா
  • Posted: 23 Feb, 2019 20:37 pm
  • அ+ அ-

புதுடெல்லி

பாஜக ஆட்சியில் வேலையில்லாமல் இளைஞர்கள் தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் மைதானத்தில் மாணவர்களிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘நாட்டின் வளம் அனைத்தும் சில தனி நபர்களின் கைகளில் உள்ளது. தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. தொழிலதிபர்களுக்கு மட்டுமே மத்திய அரசு உதவுகிறது. ஆனால் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதில்லை.

மாணவர்களின் கல்விக்கடனை ஏன் ரத்து செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பட்ஜெட்டில் கல்விக்கான நிதியை அதிகரிப்போம். வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்குவோம்.

வேலைவாய்ப்பு இல்லாமல் இந்தியாவில் இளைஞர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டில் வேலைவாய்ப்பின்மை பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதற்கு தீர்வு காணப்படாததால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் 450 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படுகிறது. ஆனால், சீனாவில், அதே 24 மணி நேரத்தில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. மக்களவையில் நிதி அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close