[X] Close

காஷ்மீருக்காக தான் போராடுகிறோம்; காஷ்மீருக்கு எதிராக அல்ல: பிரதமர் மோடி உறுதி


modi

  • நெல்லை ஜெனா
  • Posted: 23 Feb, 2019 16:11 pm
  • அ+ அ-

 

டோங்க்

புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு காஷ்மீர் இளைஞர்கள் மீது தாக்குதல் நடந்த நிலையில் முதன்முறையாக பிரதமர் மோடி இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீருக்காக தான் போராடுகிறோமே தவிர காஷ்மீருக்கு எதிராக அல்ல என அவர் கூறியுள்ளார்.

புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் கல்வி, பணி, மற்றும் வியாபாரம் நிமித்தமாக தங்கி இருக்கும் காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, மிரட்டல் விடுப்பது போன்ற சம்பவங்கள் நடந்தன.

இதனால், காஷ்மீரைச் சேர்ந்த மக்கள், தங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இடங்களை விட்டு, மீண்டும் காஷ்மிருக்கும் திரும்பினார்கள். இந்த சம்பவம் காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலையும் ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதுதொடர்பான வழக்க விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசும்,  11 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டிஜிபிக்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்தநிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் டோங்க் தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘தீவிரவாதத்துக்கு எதிராக நாம் போரிட்டு வருகிறோம். மனிதநேயத்துக்கு எதிரானவர்களுடன் தான் நமது போராட்டம். காஷ்மீருக்காக தான் போராடுகிறோம். காஷ்மீருக்காக அல்ல. காஷ்மீர் மக்களுக்கு எதிராக அல்ல.

காஷ்மீர் இளைஞர்களுக்கு எதிராக சமீபகாலமாக நடந்து வரும் சம்பவங்கள், சிறிதோ, பெரிதோ ஆனால் அதனை ஏற்க முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாது. காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள். காஷ்மீரின் ஒவ்வொரு குழந்தையும் இந்தியாவுடன் உள்ளது. நமது போராட்டம் தீவிரவாதத்துக்கு எதிராக மட்டுமே’’ எனக் கூறினார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close