[X] Close

குடும்ப, வாரிசு அரசியலை மாற்றவே திருவாரூரில் பொதுக்கூட்டம்: கமல்ஹாசன் கருத்து


kamalhassan

  • kamadenu
  • Posted: 22 Feb, 2019 11:06 am
  • அ+ அ-

குடும்ப, வாரிசு அரசியலை மாற்றுவதற்காகவே திருவாரூரில் பொதுக்கூட்டம் நடத்துகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:எம்ஜிஆர் போட்ட இலையை இப்போது உள்ளவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் இலையை இரண்டாகப் பிரித்து. ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் கொண்டாட உள்ளார்கள். அவரது இறந்தநாள் எது என்று சொல்ல அவர்களால் முடியுமா. இது எவ்வளவு பெரிய மரணம், எவ்வளவு பெரிய துரோகம் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

இந்த ஊர் (திருவாரூர்) நல்லவர்களை அரசியலுக்கு கொடுத்துள்ளது. அத்துடன் தமிழ்நாட்டில் குடும்ப அரசியலையும், வாரிசு அரசியலையும் கொடுத்திருக்கிறது. இதை மாற்றுவதற்காகவே திருவாரூரில் பொதுக்கூட்டம் நடத்துகிறேன்.

அதிகமாக பேசினால் வருமான வரி சோதனை வரும் என மிரட்டுவார்கள். இது என் நாடு, தமிழகம் என் வீடு.

நாட்டின் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் பெரும் பங்கு தமிழர்களுக்கு உள்ளது. வாக்களிக்கும்போது மனம் மாறாமல் நாட்டைப் பற்றி நினைத்துக் கொள்ளுங்கள். அப்போது என் நினைவும் உங்களுக்கு வரும். நான் இனி உங்கள் சொத்து. எப்படிப் பயன்படுத்த வேண்டுமோ அப்படிப் பயன்படுத்திக் கொள் ளுங்கள்.

நீங்கள்தான் (பொதுமக்கள்) முதலாளி என்று எண்ணுங்கள். நான் உட்பட அனைவரும் உங்களுக்கு வேலைக்காரர்கள்தான். நீங்கள்தான் தலைவர்கள். நேர்மையாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் சேருங்கள்.

டெல்டா பகுதி பசுமை வேளாண் பகுதியாக பாதுகாக்கப்பட வேண்டும். விவசாய முறையை மாற்ற வேண்டும், நீரை சேமிக்க திட்டமிட வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close