[X] Close

ஹாட்லீக்ஸ் : நெறய்ய மார்க் போடுங்க பாஸ்! நெல்லை எம்.பி.யின் கெஞ்சல்


hotleaks-admk-mp

  • kamadenu
  • Posted: 21 Feb, 2019 09:20 am
  • அ+ அ-

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் சிட்டிங் எம்பி-க்கள் பலரும் மறுபடியும் ஸீட்  வாங்குவதற்கு என்னென்னமோ  செய்கிறார்கள். 

இந்தச் சமயத்தில் எம்பி-க்களின் ஐந்தாண்டு செயல்பாடுகள் குறித்து செய்திகளை வெளியிடும் ஊடகங்கள்  அதற்கு ஒரு  மதிப்பெண்ணையும் போட்டு மானத்தை வாங்குகின்றன. அந்த வகையில் நெல்லை தொகுதி அதிமுக எம்பி-யான  கே.ஆர்.பி.பிரபாகரனின் செயல்பாடுகள்  குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்கள் சிலர்,  பிரபாகரனிடமும்  பேசியிருக்கிறார்கள்.  

அப்போது, “கட்சியில மறுபடியும் ஸீட் கேட்டுருக்கேன் பாஸ்.  தயவு செஞ்சி எனக்கு நெறய்ய மார்க்போடுங்க” என்று  கெஞ்சினாராம். 

“மார்க் போடுறதெல்லாம் எங்க கையில இல்லைங்க...” என்று செய்தியாளர்கள் சொன்னதற்கு, “யார பிடிச்சா நெறய்ய மார்க் வாங்கலாம்னு சொல்லுங்க பாஸ். நானே அவங்கட்ட பேசுறேன்” என்று  விடாப்பிடியாக முரண்டு பிடித்தாராம் பிரபாகரன்.  அவரைக் கழற்றிவிடுவதற்குள் படாதபாடு பட்டிருக்கிறார்கள் செய்தியாளர்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close