[X] Close

ஹாட்லீக்ஸ் : விருதுநகரில் ஓபிஎஸ் மகன்?


hotleaks-ops-son

ஓ.பன்னீர்செல்வம்

  • kamadenu
  • Posted: 20 Feb, 2019 09:40 am
  • அ+ அ-

தேனி பாராளுமன்றத் தொகுதியைக் குறிவைத்து கடந்த ஒரு வருடமாகக் களமாடுகிறார் ஓபிஎஸ்ஸின்மகன் ரவீந்திரநாத். 

அவரது விசுவாசிகளும் அண்மையில் வந்த அவரது பிறந்தநாளுக்கு, 'தேனி டு டெல்லி’என போஸ்டர்  ஒட்டி குஷியானார்கள்.  

ஆனால், தேனியில் காங்கிரஸ் வேட்பாளராக ஆரூண் நின்றால் சிறுபான்மையினரின்  ஓட்டு நமக்குத் தேறாது.  பெரும்பான்மையாக உள்ள கள்ளர் சமூகத்தின் வாக்குகளைஅமமுக தங்கதமிழ்செல்வன் தட்டிவிடுவார்’ என்றெல்லாம் அஞ்சுகிறாராம் ரவீந்திரநாத். 

அதனால் மாற்று ஏற்பாடாக விருதுநகர் தொகுதிக்கும் ஒரு விருப்ப மனு  கொடுத்திருக்கிறார்.  விருதுநகரில் திமுகபோட்டியிடாது.  காங்கிரஸோ, மதிமுகவோதான் போட்டியிடும் என்பதால் மகனின் வெற்றி எளிதாகஇருக்கும் என ஓபிஎஸ்ஸும் ஒரு கணக்குப் போடுகிறாராம். ஆனால், இந்தக் தேர்தலில் வாரிசுகளுக்குவாய்ப்பளிக்கக்கூடாது என அதிமுகவுக்குள் கிளம்பியிருக்கும் கலகக்குரலை இவர்கள் எப்படிச் சமாளிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close