[X] Close

மன்னிப்பு கோரினார் மேற்கு வங்க மாநில தலைமை செயலர்


apologized-to-the-secretary-general-of-west-bengal

  • kamadenu
  • Posted: 19 Feb, 2019 10:12 am
  • அ+ அ-

சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பான ஆவணங்களை கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் அழித்துவிட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த கடந்த 3-ம் தேதி காவல் ஆணையர் வீட்டுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மேற்கு வங்க தலைமைச் செயலாளர் மாலே குமார், காவல் துறை தலைவர் வீரேந்திர குமார், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close