[X] Close
 

மோடி தமிழகம் வந்திருப்பது ஆணவப்போக்கு: பழ.நெடுமாறன்


pazha-nedumaran-slams-modi

  • பாரதி
  • Posted: 12 Apr, 2018 14:28 pm
  • அ+ அ-

தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அதிகாரத் துணையோடு பிரதமர் மோடி தமிழகம் வந்திருப்பது ஆணவப்போக்கு என தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்திருக்கிறார்.

ராணுவ கண்காட்சியை தொடக்கிவைப்பதற்காகவும் சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழாவில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும்நிலையில், மத்திய அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புச் சட்டை அணிந்தும் கருப்புக் கொடி காட்டியும் கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்ட தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன், "காவிரிப் பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துவரும் நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருவது என்பது தமிழக மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அவர் இங்கே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிறார் என்றால், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு அவர் கொஞ்சமும் மதிப்பளிக்கவில்லை என்று அர்த்தமாகும்.
நாம் தமிழக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றமாட்டேன், அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மாட்டேன் ஆனாலும் அதிகாரத்தின் துணைகொண்டு தமிழகத்துக்கு வருவேன் என்பது ஆணவப்போக்கு.
இந்த ஆணவப்போக்கை தமிழக மக்கள் வண்மையாகக் கண்டிப்பார்கள் என்பதன் அறிகுறிதான் இந்தப் போராட்டங்கள்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close