[X] Close

கொட்டித் தீர்த்த மழை: 4 மணிநேரம் சிறைப்பட்ட பிரதமர் மோடி- மொபைல் போனில் உரை


modi

  • நெல்லை ஜெனா
  • Posted: 14 Feb, 2019 18:37 pm
  • அ+ அ-

டேராடூன்

உத்தரகண்ட் மாநிலத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்ற நிலையில் மிக மோசமான வானிலை காரணமாக அவரால் செல்ல முடியவில்லை. நான்கு மணிநேரத்துக்கும் மேலாக அவர் விமான நிலையத்தில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு உத்தரகண்ட் மாநிலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கவும், தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவும் பிரதமர் மோடி அங்கு சென்றார். டேராடூன் விமானநிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் ருத்ரபூரில் நடக்கும் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டது. இதற்கு ஏற்றபடி இன்று காலை 7:30 மணியளவில் பிரதமர் மோடி டேராடூன் வந்து விட்டார்.

ஆனால் விமான நிலையத்தை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு மழை கொட்டியது. அத்துடன் வெளிச்சமும் மிக குறைவாக இருந்ததால் ஹெலிகாப்டரை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் காலை 11:30 மணி வரை அவர் காத்திருந்தார். பின்னர் நிலைமை சற்று மேம்பட்ட பிறகே அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அங்கிருந்து கோர்பட் புலிகள் சரணாலயம் சென்ற அவர் அங்குள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கினார். தொடர்ந்து மழை பெய்ததால் வேறு வழியின்றி அங்கிருந்தபடியே மொபைல் போனில் உரையாற்றினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close