[X] Close

மோடி சர்ருசர்ருன்னு வெளிநாட்டுக்கு... ஆனா தமிழ்நாட்டுக்கு..? அப்பாவியானந்தா கேக்கறார்


modi-tamilnadu-karuppukodi

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Apr, 2018 09:33 am
  • அ+ அ-

அப்பாவியானந்தா, காலங்கார்த்தாலயே மீனம்பாக்கத்துல லேண்டானார். திரும்புன பக்கமெல்லாம் போலீஸ்... போலீஸ்... போலீஸ். 

இந்தியாவுலயே தடக்குதடக்குன்னு வெளிநாட்டுக்கு போயிட்டிருக்கிற பிரதமர் நம்ம மோடிதான். கடந்த வருஷங்கள்ல, மாணவர்கள்கிட்ட பரீட்சைல, ‘மோடி இப்ப எந்த நாட்ல இருக்கார்’ங்கற கேள்வி கேட்டா, பசங்களுக்கு பதில் எழுதமுடியாதுன்னு கிண்டலா சொல்லுவாங்க. அந்த அளவுக்கு நாடு நாடாப் போறவர் நம்ம பிரதமர் ஐயா. அட... பாகிஸ்தானுக்குக் கூட ஜம்முன்னு போயிட்டு வந்துட்டாப்ல. ஆனா பாருங்க... தமிழ்நாட்டுக்கு வர்றதுலதான் இத்தனை களேபரமும்... கருப்புக்கொடி அதகளங்களும்.

சென்னை மீனம்பாக்கத்துலேருந்து ஆரம்பிச்சு கிண்டி வரைக்கும் ஏகப்பட்ட போலீஸ் வாகனங்கள், ஓலா, ஃபாஸ்ட் டிராக் ரேஞ்சுக்கு வரிசைகட்டி நிக்கிது. போதாக்குறைக்கு, அரசு போக்குவரத்துக் கழக பஸ்செல்லாம் வரிசையா நிக்க வைச்சிருக்காங்க. கருப்புக் கொடி ஏந்தி வர்றவங்களை, பஸ்ல ஏத்திட்டுப் போறதுக்காக முன் ஏற்பாடாம்!

குவிஞ்சிருக்கிற போலீஸ் கூட்டத்தைப் பாத்துட்டு, நம்ம மக்கள் பேசிக்கிட்டதுதான் சுவாரஸ்யம்... மோடியை வரவேற்க வர்ற தாமரைக் கட்சிக்காரங்களை விட, போலீஸ் எண்ணிக்கைதான் ஜாஸ்தி.

‘என்ன... பயப்படுறியா கொமாரு..!’ன்னு கேக்கணும் போல இருக்குது. யார்கிட்ட கேக்கறது? 

என்ன ஐபிஎல்லு... இப்படி ஆயிருச்சு!

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்னு சொல்றது, ஐபிஎல்லுக்கும் பொருந்தும்னு சொன்னாரு அப்பாவியானந்தா.

ஆமாங்க. வேணாம்யா வேணாம். வேற எங்கனா ஆடுங்க. காவிரிக்கு மேலாண்மை வாரியம் அமைக்காததால, தத்தளிச்சு கொந்தளிச்சிட்டிருக்கு தமிழ்நாடு. இதுல இதெல்லாம் தேவையே இல்லைன்னு சொன்னதைக் கேக்கவே இல்லை. அரசாங்கமும் ‘அது விளையாட்டு. அதுல நாங்க எப்படி தலையிடமுடியும்’னு கையைக் கட்டிக்கிச்சு. ‘இங்கேதான் நடக்கும். நடந்தே தீரும்’னு ஐபிஎல், நெஞ்சு நிமிர்த்தி சொல்லுச்சு.

விளையாட்டையே விளையாட்டாப் பாக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க. இவங்க என்னடான்னா, காவிரியையும் விவசாயத்தையும் விளையாட்டா எடுத்துக்கிட்டாங்க. இதனால அன்னிக்கி நடந்த ஆர்ப்பாட்ட, போராட்ட, எதிர்ப்புகள் அவ்ளோ சீக்கிரம் மறந்துடமுடியுமா?

இப்ப ஐபிஎல் பயந்துருச்சு. அடுத்தடுத்த ஆட்டங்கள்ல, ஆட்டம் காண்ற அளவுக்கு எகிடுதகிடா போராட்டம் வெடிக்குமோன்னு பயந்துட்டு, ‘போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க’ன்னு சொல்லிருக்கு ஐபிஎல். சூடம் ஏத்தி சத்தியம் பண்ணினாக் கூட இதை யாரும் நம்பமாட்டாங்க.

சரி அதை விடுங்க. முன்னாடியே சென்னைல நடத்தலைன்னு பின்வாங்கியிருந்தா, கெத்தா இருந்திருக்கும்ல. என்னத்த சொல்றது... பட்டாத்தான் தெரியும்னு சும்மாவா சொன்னாங்க!

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close