[X] Close

‘‘12-ம் வகுப்பு படித்த பிரதமரை மீண்டும் தேர்வு செய்யாதீர்கள்’’ - மோடியை சாடிய கேஜ்ரிவால்


modi

  • நெல்லை ஜெனா
  • Posted: 14 Feb, 2019 11:38 am
  • அ+ அ-

 

புதுடெல்லி

கடந்த முறை வெறும் 12-ம் வகுப்பு மட்டுமே படித்த பிரதமரை தேர்வு செய்த இந்திய மக்கள் இந்த முறை அந்த தவறை செய்யக்கூடாது, படித்த ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமர் மோடியை தாக்கி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி, 1978-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ., முடித்ததாகத் தேர்தல் விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தார். இதுகுறித்த ஆதாரங்களைத் தரும்படி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், நீரஜ் என்ற சமூக ஆர்வலர் கேட்டிருந்தார்.

அதற்கு, டெல்லி பல்கலை அதிகாரி மறுப்புத் தெரிவித்தார். மூன்றாம் நபர் குறித்த விபரங்களைக் கோருவதாலும், அதில் பொதுநலன் ஏதும் இல்லை என்றும், தகவல் அதிகாரி தன் பதிலில் கூறியிருந்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தை ஆம் ஆத்மி கட்சியும், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் தொடர்ந்து எழுப்பி வந்தனர். இந்த நிலையில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமரின் கல்வித்தகுதி குறித்து கேஜ்ரிவால் மீண்டும் பேசியுள்ளார்.

டெல்லியில் எதிர்க்கட்சிகள் நேற்று கூட்டாக நடத்திய கூட்டத்தில் கேஜ்ரிவால் கலந்து கொண்டு பேசியதாவது:

‘‘கடந்த மக்களவைத் தேர்தலின்போது, வெறும் 12-ம் வகுப்பு மட்டுமே படித்த பிரதமரை இந்த நாட்டு மக்கள் தேர்வு செய்தனர். எங்கே கையெழுத்து போட வேண்டும் என்று கூட அவருக்கு தெரியாது. அதுபோன்ற ஒரு தவறை இந்திய மக்கள் மீண்டும் செய்து விடக்கூடாது. படித்த ஒருவரை இனிமேல் பிரதமராக தேர்வு செய்ய வேண்டும். படித்தவர்களால் தான் திறன்பட நாட்டை நிர்வகிக்க முடியும்’’ எனக் கூறினார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close