[X] Close

நீங்கள் யார் சார் உத்தரவுபோட?- ரஜினிக்கு பாலபாரதி பதிலடி


balabharathi-slams-rajinikanth

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Apr, 2018 21:44 pm
  • அ+ அ-

சென்னை அண்ணாசாலையில் செவ்வாய்க்கிழமை நடந்த போராட்டத்தின்போது காவலர்கள் சிலர் தாக்கப்பட்டதற்கு ரஜினி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வும் சமூக செயற்பாட்டளருமான பாலபாரதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், 

"400 விவசாயிகள் காவிரிமண்ணில் மரணமடைந்தார்களே அப்போது சிறிதாவது கவலைப்பட்டீர்களா?
ஏதோ நீங்களே பிரதமமந்திரி என்பதுபோல் காவல்துறைக்கு வக்காலத்துவாங்குகிறீர்களே..
அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே எதேச்சதிகாரமா?
நீங்கள் யார் சார் உத்தரவுபோட.?
உங்கள் தொழில் நடிப்பு.
எங்கள் தொழில் விவசாயம்.
அதை அழிக்க கடவுளுக்கே அதிகாரமில்லை.
இமயமலை உள்ளிட்ட எல்லா மலைச்சாமியார்களையும் சேர்த்துதான் 
கூறுகிறேன்"

எனக் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், " "வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்" எனக் கூறியிருந்தார்.

ரஜினியின் இந்தக் கருத்தை ஆதரிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, " "பொதுமக்களைப் பாதிக்கும் அளவிற்கு..சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் அளவிற்கு... நடந்துகொள்ளும் வன்முறையாளர்களை எதிர்த்திருப்பது... சரியானதே..." என்று ட்வீட் செய்திருந்தார்.

அதேபோல், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, " "சீருடையில் இருந்த காவலர்களை போராட்டக்காரர்கள் தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது இவர்களுடைய தலைமையின் பண்பற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ரஜினியின் ட்வீட்டை முன்வைத்து பாலபாரதி தனது முகநூல் பக்கத்தில் காட்டமான பதிவை பகிர்ந்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close