[X] Close

நீங்கள் பாகிஸ்தானுக்கு பிரதமரா? இந்தியாவுக்கா? - மோடிக்கு கேஜ்வரிவால் சரமாரி கேள்வி


arvind-kejriwal

  • நெல்லை ஜெனா
  • Posted: 11 Feb, 2019 17:24 pm
  • அ+ அ-

புதுடெல்லி

பாகிஸ்தான் பிரதமர் போல மோடி செயல்படுவதாகவும், மாநில அரசுகளை புறக்கணிப்பதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டித்தும், சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ், ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆந்திர பவனில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடுவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது ராகுல் பேசுகையில், "ஆந்திர மக்களுக்கும், மாநிலத்துக்கும் ஆதரவாக நான் இருப்பேன். ஆந்திர மக்களிடம் இருந்து பணத்தைத் திருடி, பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு கொடுத்திருக்கிறார்’’ எனக் கூறினார்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சந்திரபாபு நாயுடுவை, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் கேஜ்ரிவால் பேசுகையில் ‘‘பிரதமர் மோடி, பாஜகவுக்கு மட்டும் பிரதமர் அல்ல. ஒட்டுமொத்த நாட்டுக்கும் அவர் தான் பிரதமர். ஆனால் அந்த எண்ணம் துளியும் இல்லாமல் அவர் மாநில அரசுகள் மீது காழ்புணர்ச்சியுடன் செயல்படுகிறார். மேற்குவங்கம், டெல்லி, ஆந்திரா என எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில அரசுகளுக்கு தொந்தரவு கொடுப்பதையும், அந்த மாநிலங்களை புறக்கணிப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்தியாவுக்கு பிரதமர் போல அவர் செயல்படவில்லை. மாறாக பாகிஸ்தான் பிரதமர் போன்று செயல்படுகிறார்’’ எனக் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close