[X] Close

போலீஸார் மீதான தாக்குதல் வன்முறையின் உச்சம்: ட்விட்டரில் ரஜினிகாந்த் காட்டம்


rajinikanth-tweets

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Apr, 2018 09:29 am
  • அ+ அ-

காவல்துறையினர் மீதே தாக்குதல் நடத்துவது வன்முறையின் உச்சம் என நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்க இன்னும் கடுமையான சட்டங்கள் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நேற்று (ஏபரல் 10) சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் விளையாட்டுக்கு நெருக்கடி கொடுத்து பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வாலாஜா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திடீரென தடுப்பு வேலிகளைத் தகர்த்துக் கொண்டு சேப்பாக்கம் மைதானம் நோக்கி ஓடினர். அப்போது போலீஸார் கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் சிலர் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்களைத் தாக்கினர்.

இந்நிலையில் சீருடையில் இருந்த காவலர்களைத் தாக்கியதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இந்த ட்வீட்டுக்கு கீழ் காவல்துறையினர் தாக்கப்படும் வீடியோவையும் அவர் இணைத்துள்ளார்.

நேற்று நடந்த போராட்டத்தின் போது ரஜினி மக்கள் மன்றத்தினரும் கைதாகினர் என்பது கவனிக்கத்தக்கது. அவர்கள் சென்னை வாலாஜா சாலையில் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close