[X] Close

ஹாட்லீக்ஸ்: அழகிரியைச் சுற்றும் பாஜக!


hotleaks-azhagiri

மு.க.அழகிரி

  • kamadenu
  • Posted: 09 Feb, 2019 11:18 am
  • அ+ அ-

கன்னியாகுமரிக்கு அடுத்தபடியாக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியை முக்கியக் கேந்திரமாக கையில் எடுத்திருக்கிறது பாஜக. 

‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அடிக்கல்நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைத்து வந்ததன் பின்னணியும் அதுதான் என்கிறார்கள். 

இதனிடையே, திமுகவைவிட்டு ஒதுங்கியிருக்கும் மு.க.அழகிரியை பாஜகவுக்குள் இழுத்துப்போடும் முயற்சிகளும் தொடர்கின்றன. “நீங்கள் பாஜகவுக்கு வந்தால் மதுரை தொகுதியில் நிறுத்தி பழையபடி உங்களை மத்திய அமைச்சராக்குவோம்” என்றெல்லாம் அழகிரியிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

மோடி மதுரைக்கு வந்தபோது அழகிரியைச் சந்திக்க வைக்கவும் பாஜக தரப்பில் கடைசி நாள் வரைக்கும் முயன்றார்கள். ஆனால், “உங்கள் அன்புக்கு நன்றி” என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு அமைதியாகி விட்டாராம் அழகிரி. 

இது தொடர்பாக அழகிரிக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தால், “பாஜக தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது உண்மைதான்.

 ஆனால், சேர்ந்தால் திமுகவில்தான் சேர்வது என்பதில் உறுதியாக இருக்கிறார் அண்ணன். அதற்கான நேரமும் கனிந்து கொண்டிருக்கிறது” என்கிறார்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close