[X] Close
 

‘ஸ்பீடாக’ முடிந்த தமிழக காங்கிரஸ் தலைவர் உண்ணாவிரதம்


congress-fasting

  • kamadenu
  • Posted: 09 Apr, 2018 19:46 pm
  • அ+ அ-

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழக காங்கிரஸ் தலைவரின் உண்ணாவிரதம் 3 மணி நேரத்தில் படு வேகமாக முடிவடைந்தது. 

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் நீலகிரி மாவட்டம் கூடலூரில் அங்குள்ள செக்சன் 17 பிரிவு நிலப்பிரச்சினை தொடர்பாக நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தார். 

உதகை தமிழக விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். செய்தியாளர்களிடம், "காங்கரிஸ் கட்சி சார்பில் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பதால், காலை 8 மணிக்கு உங்களை சந்திக்கிறார். 10 நிமிடங்கள் மட்டுமே சந்தித்து விட்டு கூடலூருக்கு சென்று விடுவார்" எனத் தெரிவிக்கப்பட்டது. 
இதனால், காலை 7.30 மணிக்கே செய்தியாளர்கள் தமிழகம் விருந்தினர் மாளிகையில் ஆஜராயினர். 

ஆனால், ஒரு மணி நேரம் கழித்து 8.30 மணிக்கு தான் வெளியில் வந்தார். சால்வை அணிவிப்பு, தொண்டர்கள் சந்திப்புக்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். 

காவிரி மீட்பு நடைப்பயணத்தில் பங்கேற்று நல்லிரவு உதகை வந்ததால், குறிப்பிட நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்க முடியவில்லை என மாவட்ட தலைவரும், உதகை எம்எல்ஏவுமான ஆர்.கணேஷ் தெரிவித்தார். 
பேட்டி தொடங்கியது 10 நிமிடம் தான் என கூறி அரை மணி நேரத்துக்கு மேல் பேட்டி தொடர்ந்தது. 
பின்னர் சுமார் 10 மணியளவிலேயே கூடலூர் புறப்பட்டார். கூடலூருக்கு 11 மணிக்கு மேல் சென்றவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். 
அவரை நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் சந்தித்து வாழ்த்தினார். 

இந்நிலையில், மதியம் 2 மணியளவில் திடீரென உண்ணவிரதத்தை முடித்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் சு.திருநாவுக்கரசர் கூடலூர் ஸ்ரீமதுரையில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் 3 மணியளவில் காங்கிரஸ் சார்பில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
தமிழக காங்கிரஸ் தலைவரின் மூன்று மணி நேர உண்ணாவிரதம் பொதுமக்களை மட்டுமின்றி காங்கிரஸ் தொண்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


ஆர்.டி.சிவசங்கர்

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close