[X] Close

ஹாட்லீக்ஸ்: தமிழிசைக்கு உதயகுமார் உத்தரவாதம்!


hotleaks-admk-bjp

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 10:17 am
  • அ+ அ-

அதிமுக அமைச்சர்கள் பலரும் பாஜகவைக் கரித்துக் கொட்டினாலும் முக்கிய மந்திரிப் பிரதானிகள் சிலர் பாஜக மேலிடத்தோடு தனித் தனி டிராக்கில் நேசமாய் இருக்கிறார்கள். 

அந்த வரிசையில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் சேர்ந்திருக்கிறார். 

மோடியின் மதுரை பயணத்தின்போது மதுரையில் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து நீண்ட நேரம் பேசினாராம் உதயகுமார். 

அப்போது, “விருதுநகர் மாவட்டத்தில் நான் ஏற்கெனவே அமைச்சராக இருந்தவன். அந்த மாவட்டத்து மக்கள் மத்தியில் எனக்கு தனிப்பெரும் செல்வாக்கு இருக்கிறது. அதனால், விருதுநகர் தொகுதியில் நீங்கள் போட்டியிடுங்கள். விருதுநகர் தொகுதிக்குட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளும் இப்போது என் பொறுப்பில்தான் இருக்கு. நீங்கள் விருதுநகரில் போட்டியிட்டால் உங்களை ஜெயிக்கவைக்க வேண்டியது என் பொறுப்பு” என்று சொன்னவர் கூடவே, டெல்லியில் மோடியை தனியே சந்திக்க உதவுமாறு வேண்டுகோளும் வைத்தாராம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close