[X] Close

அரசியலில் குதிக்கும் திட்டம் இல்லை: நடிகர் மோகன்லால் அறிவிப்பு


mohanlal-speech

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 08:38 am
  • அ+ அ-

அரசியலுக்கு வரமாட்டேன் என்று பிரபல மலையாள நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தி நடிகர் அக் ஷய்குமார், மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்கள் உள்ளிட்ட 70 பிரபலங்களை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

கேரளாவில் சபரிமலை விவகாரத்தில் இடதுசாரி அரசுக்கு எதிராக போராடிவரும் பாஜக மக்களவைத் தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை வகுக்கிறது. இதன் ஒரு பகுதியாக மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலை களமிறக்க திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியானது. இந்நிலையில் கேரள பாஜக தலைவர் ராஜகோபால் அளித்த பேட்டியில், “2019 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட மோகன்லாலிடம் பாஜக பேசி வருகிறது” என்றார். இதனால் அவர் பாஜகவில் இணைந்து போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கு அவருடைய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள் ளது.

இந்நிலையில் அரசியலில் குதிக்கும் திட்டமில்லை என்று மோகன்லால் அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, “எனக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை. நான் தொடர்ந்து நடிகனாகவே இருக்க விரும்புகிறேன். இந்தத் துறையில் நான் சுதந்திரமாக செயல்பட முடிகிறது. ஆனால் அரசியலிலோ உங்களை நம்பி ஏராளமான பேர் இருப்பார்கள். எனவே அது எளிதானது அல்ல. எனக்கு அதுபற்றியும் தெரியாது. அரசியலுக்கு வரமாட்டேன். பாஜகவில் சேரும் விருப்பமும் இல்லை” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close