[X] Close

நீங்கள் சூப்பர்ஸ்டார் ஆகியிருக்க முடியுமா?- ரஜினியைப் போட்டுத்தாக்கிய தமிழிசை


tamilisai-rebuts-rajinis-kannadiga-remark

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Apr, 2018 11:14 am
  • அ+ அ-

"கன்னடரான சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்திருக்கக் கூடாது என இன்றைக்கு கருத்து கூறும் அண்ணன் ரஜினிகாந்த் அவர்களே.. சுமார் 30,40 ஆண்டுகளுக்கு முன்னர், 'கன்னடர் ஒருவர் நடிப்பதைப் பார்க்க மாட்டோம்' எனத் தமிழர்கள் சொல்லியிருந்தால் இன்று நீங்கள் இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா? சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியுமா? என மிகக் காட்டமாக பேசியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

அன்று ஆன்மீக அரசியலில் ஈடுபடுப்போவதாக ரஜினிகாந்த முதன் முதலில் அறிவித்தபோது ஆதரித்தவர்தான் தமிழிசை. ஆனால், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வேளச்சேரியில் நடந்த 'தமிழ்த் தாமரை யாத்திரை' நிறைவு விழாவில் பேசிய தமிழிசை, ரஜினியை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

பிரிவினைவாதம் பேசியிருந்தால்..

"வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். திறமை யாரிடம் இருந்தாலும் தமிழகம் பெற்றுக்கொள்ளும். அதைப் பயன்படுத்திக் கொண்டு இன்று நீங்கள் (ரஜினிகாந்த்) மத்திய அரசை குறைகூறுகிறீர்களா? நீங்கள் இன்று பேசுவதுபோல் பிரிவினைவாதத்தை தமிழக மக்கள் பிரிவினைவாதம் பேசியிருந்தால் உங்களால் இன்று சூப்பர்ஸ்டார் ஆகியிருக்க முடியுமா? நீங்கள் மத்திய அரசின் மீதும் எங்கள் கட்சியின் மீதும் குறை கூறுவதாலேயே நான் இதை இன்று பேசுகிறேன்" எனப் பேசினார் தமிழிசை.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close