[X] Close

ஹாட்லீக்ஸ்: அலர்ட் அன்புமணி


hotleaks-anbumani

அன்புமணி ராமதாஸ்

  • kamadenu
  • Posted: 04 Feb, 2019 10:46 am
  • அ+ அ-

தனது தொகுதியான தருமபுரிக்கு எப்போது வந்தாலும் எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்கி எழுதுமளவுக்கு பேட்டியளித்து அசரடிப்பது அன்புமணி ராமதாஸின் வாழக்கம். 

ஆனால், கடந்த 24-ம் தேதி, பென்னாகரத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணியின் பேரனின் காதணி விழாவுக்கு வந்த அன்புமணி, கப் சிப் ஆகிவிட்டார்.

 ‘மைக்’கை நீட்டிய செய்தியாளர்களிடம், “தகவல் ஒன்றும் இல்லையே...” என்று நழுவினார். 

“எப்போதும் இல்லாதபடி இன்றைக்கு சின்னய்யா ஏன் இப்படி எங்களைப் பார்த்து தெறிக்கிறார்?” என்று பாமகவினரிடம் கேட்டதற்கு, “அதெல்லாம் ஒண்ணுமில்லை... கூட்ட நெரிசல்ல உடையெல்லாம் அழுக்காகிருச்சு. அதனாலதான்” என்று அவர்கள், அவரைக்காட்டிலும் நழுவினார்கள்.

 அதிமுக, பாஜக உள்ளிட்ட பல கட்சிகளிடமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது பாமக. 

இந்த நேரத்தில் மீடியாக்கள் கொக்குச்சிக்கலாக எதையாவது கேட்டு அதற்கு எக்குத்தப்பாக எதையாவது சொல்லிஆட்டையைக் கெடுத்துவிட வேண்டாம் என்ற எச்சரிக்கையில்தான் அம்புட்டு அலர்ட் ஆனாராம் சின்னய்யா. 

என்னமோ போங்கய்யா!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close