[X] Close

ஹாட்லீக்ஸ்: திண்டிவனத்துக்கு வந்த திடீர் மாப்ள!


hotleaks-admk

விழுப்புரம் எம்.பி. ராஜேந்திரன்

  • kamadenu
  • Posted: 30 Jan, 2019 09:48 am
  • அ+ அ-

விழுப்புரம்  எம்பி-யான  ராஜேந்திரன் வானூர் தொகுதியில் உள்ள திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர். 

இவர் கடந்த சில தினங்களாக திண்டிவனம் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசி வருகிறார். 

திடீரென திண்டிவனத்து மக்கள் மீது அப்படி என்ன அக்கறை என்று விசாரித்தால் கதை வேறு மாதிரியாய் போகிறது. சட்டமன்றத் தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிடத் தயாராகும்படி மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கிளப்பிவிட்டிருக்கிறாராம். 

அப்படியானால், எம்பி தேர்தலில் போட்டியிட விழுப்புரத்துக்கு, சண்முகம் தேர்வுசெய்து வைத்திருக்கும் நபர் யார் என்பதே விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் எங்கு திரும்பினாலும் கேள்வியாய் இருக்கிறது.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close