[X] Close

ஹாட்லீக்ஸ்: புன்சிரிப்பில் மிதக்கும் பொன்னார்!


hotleaks-bjp

பொன்.ராதாகிருஷ்ணன்

  • kamadenu
  • Posted: 28 Jan, 2019 08:54 am
  • அ+ அ-

கன்னியாகுமரி தொகுதியில் இந்த முறையும் பொன்.ராதாகிருஷ்ணன் தான் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். 

இந்தத் தொகுதியில் வெள்ளாளர்(நாஞ்சில் நாடு) சமூகத்துக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது.

 “பொதுப்பிரிவில் இருக்கும் வெள்ளாளர் சமூகத்தை  பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்போம்” எனக் கடந்த 15 ஆண்டுகளாக திமுகவும் அதிமுகவும் வாக்குறுதிகளை வாரி வழங்கி தேர்தலைச் சந்தித்தன.  

ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. 

இந்நிலையில் மத்திய அரசின், பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அறிவிப்பும், அதற்கு திராவிட கட்சிகளின் எதிர்வினையும் பெருவாரியான வெள்ளாளர் சமூகத்து மக்களை பாஜக பக்கம் திருப்பி இருக்கிறது. இது தொடர்பாக அந்தச் சமூகத்தினர் பல ஊர்களில் கூட்டம் போட்டு பாஜகவை ஆதரிக்க முடிவெடுத்து வருவதால் புன்சிரிப்பில் மிதக்கிறார் பொன்னார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close