[X] Close

ஹாட்லீக்ஸ்: பாமக சரிவு; சமாளிக்க ப்ளான்!


hotleaks-pmk

ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ்

  • kamadenu
  • Posted: 27 Jan, 2019 10:34 am
  • அ+ அ-

காடுவெட்டி குருவின் அம்மா, மகள், மகன், மருமகன் உள்ளிட்டவர்கள் பாமகவிலிருந்து நீக்கப்பட்ட வி.ஜி.கே. மணியின் கட்டுப்பாட்டில்தான் தற்போது இயங்குகிறார்கள். ராமதாஸுக்கு  எதிராக புதிய வன்னியர் சங்கத்தைத் தொடங்கும் திட்டத்தில் டெல்டா பகுதியில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்  மணி. இந்த  நிலையில், பாமக  துணைத் தலைவராக இருந்த ம.க.ஸ்டாலினையும் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.

இவரும் இப்போது டெல்டா மாவட்டங்களில் வன்னிய சொந்தங்களை  அணிதிரட்டி வருகிறார். இவர்கள் இருவராலும் டெல்டா மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்கு சரிய ஆரம்பித்திருக்கிறது.

இதைச் சரிசெய்வதற்காக கூடிய விரைவில் மருத்துவர் ராமதாஸும் அன்புமணியும் டெல்டா மாவட்டங்களில் பாமக தொண்டர்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தப் போகிறார்களாம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close