[X] Close

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #MaduraiThanksModi, #GoBackModi


maduraithanksmodi-gobackmodi-tweets-trend-in-twitter

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Jan, 2019 18:08 pm
  • அ+ அ-

ட்விட்டரில் சென்னையளவில்  #MaduraiThanksModi, #GoBackModi என்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின்றன. 

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.1,264 கோடியை அனுமதித் துள்ளது. இதையடுத்து மருத்துவமனை கட்டுமானப் பணியை தொடங்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையில்  அடிக்கல் நாட்டும் விழா நாளை (ஜன.27-ம் தேதி) நடைபெறுகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் இன்று காலை முதலே  #MaduraiThanksModi, #GoBackModi ஆகிய ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.
#MaduraiThanksModi என்ற ஹேஷ்டேகின் கீழ் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவருவதற்காக நன்றி தெரிவித்து ட்வீட்கள் பதிவிடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் #GoBackModi என்ற ஹேஷ்டேகும் ட்ரெண்டாகி வருகிறது. இதில் பலரும் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, நாம் தமிழர் என பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும் கருப்பு உடையணிந்தும், தங்கள் இல்லங்களில் கருப்புக் கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘மோடியே திரும்பிப் போ’ என்பதைக் குறிக்கும் வகையிலான ‘Go Back Modi’ என்ற ஹேஷ் டேகை ட்ரெண்ட் செய்தனர். இது உலகளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் தற்போது #GoBackModi ட்ரெண்ட் செய்யப்படுகிறது. இந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் சென்னை அளவில் 2-வது இடம் பிடித்திருக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close