[X] Close

ஹாட்லீக்ஸ் : பிரமாதம் பினராயி


hotleaks-binarayi

பினராயி விஜயன் - மோடி

  • kamadenu
  • Posted: 26 Jan, 2019 10:36 am
  • அ+ அ-

கொல்லம் பைபாஸ் சாலை தொடக்க விழாவுக்காக கடந்த வாரம் கேரளம் வந்திருந்தார் பிரதமர் மோடி. 

இந்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசத் துவங்கியதுமே, அவரை எதிர்த்து பாஜகவினர் சிலர் கோஷமிட்டனர். சபரிமலை விவகாரத்தைக் குறிக்கும் வகையில் சிலர் சரணகோஷமும் எழுப்பினர். 

இதற்கெல்லாம் அசராத பினராயி விஜயன், “வெறுமனே குரலை உயர்த்தி கோஷமிடுவதற்காகவே இங்கே சிலர் வந்திருப்பது போல் தெரிகிறது. எப்படியும் செயல்படலாம் என்பதைக் காட்டுவதற்குரிய இடமும் இதுவல்ல. 

இதற்கெல்லாம் நான் அஞ்சவும் மாட்டேன். யாராக இருந்தாலும் பொது இடங்களில் மரியாதையுடன் நடக்க கற்றுக்கொள்ள வேண்டும்” என மோடியை மேடையில் வைத்துக்கொண்டே பாஜகவினருக்கு ‘நச்’ கொடுத்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close