[X] Close

ஹாட்லீக்ஸ்: பவர் வைத்தி; பரிதாப துரை!


hotleaks-admk

வைத்திலிங்கம்

  • kamadenu
  • Posted: 21 Jan, 2019 11:54 am
  • அ+ அ-

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு முன்பெல்லாம் முன்னாள் வேளாண் அமைச்சர் வைத்திலிங்கம் அட்வைஸ்படிதான் நடப்பார். 

ஆனால், கடந்த சில மாதங்களாக தனி ரூட்டில் நடக்க ஆரம்பித்து விட்டாராம். 

இதை வைத்திலிங்கத்தால் ஜீரணிக்க முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில், தஞ்சை மாவட்ட எஸ்பி-யாக இருந்த செந்தில் குமாரிடம் சில காரியங்களை முன்வைத்தாராம் வைத்திலிங்கம். 

ஆனால், “சட்டச்சிக்கல் வரும்” என்று சொல்லி அவற்றைச் செய்துகொடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டாராம் எஸ்பி.

 இதையடுத்து, “வன்னியரான துரைக்கண்ணு தனது சாதிக்காரரான எஸ்பியை வைத்துக்கொண்டு எனக்கே செக் வைக்கிறார்” என்று கட்சித் தலைமையின் காதைக் கடித்திருக்கிறார் வைத்தி. 

இதையடுத்து, நெல்லை ஆயுதப்படை பிரிவுக்கு அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார் எஸ்பி. 

இந்த  டிரான்ஸ்ஃபரை நிறுத்திவைக்க துரைக்கண்ணு எவ்வளவோ முயன்றாராம். ஆனால், “வைத்திலிங்கத்தை மீறி எதுவும் செய்யமுடியாது” எனக் கைவிரித்து விட்டதாம் கட்சித் தலைமை!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close