[X] Close

மக்கள் நீதி மய்யம் ஓர் இந்து விரோத அமைப்பு: பாஜக தேசிய செயலர் எச்.ராஜா விமர்சனம்


raja-about-kamal

  • kamadenu
  • Posted: 20 Jan, 2019 10:03 am
  • அ+ அ-

மக்கள் நீதி மய்யம் கட்சி இந்து விரோத அமைப்பு என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையாகத் தாக்கியுள்ளார்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதையும் மீறி சபரிமலை செல்லும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது.

கேரள அரசு தகவல்சபரிமலைக்கு வரும் பெண்களை இந்து அமைப்பினர் தொடர்ந்து தடுத்து திருப்பி அனுப்புகிறார்கள். “சபரிமலைக்கு இதுவரை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சென்றுள்ளனர்” என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சபரிமலை விவகாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறும்போது, “சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் கேரள அரசை குறை கூறக்கூடாது” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் கமல்ஹாசனை தனது ட்விட்டர் பக்கத்தில் எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில், “சபரிமலையைப் பொறுத்தவரை கேரள அரசைக் குறை சொல்லக்கூடாதாம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டுமாம். கமல்ஹாசன் கூறுகிறார். அப்படியானால் 2017-ல் பிரவம் சர்ச் குறித்த தீர்ப்பை பினராயி விஜயன் அரசு ஏன் செயல்படுத்தவில்லை என கேட்கும் துணிவு உண்டா கமலுக்கு? மொத்தத்தில் மக்கள் நீதி மய்யம் இந்து விரோத அமைப்பே” என்று கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close