[X] Close

தமிழக பாஜக தலைவர்கள் அதிமுகவினரை அடிமைபோல பேசுவதை பொறுக்க முடியாது:  தம்பிதுரை எம்.பி. எச்சரிக்கை


thambidurai-speech

  • kamadenu
  • Posted: 20 Jan, 2019 10:01 am
  • அ+ அ-

மத்திய அரசின் எந்தவொரு திட்டமும் தமிழகத்துக்கு பலனளிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, தமிழக பாஜகவினர்அதிமுகவினரை அடிமைபோல பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருவாரூரில் சுவாமி தரிசனம் செய்ய வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கும், இயற்கை பேரிடர் பாதிப்புகளை மீட்டெடுக்கவும் நிதியை ஒதுக்கவில்லை. மத்தியஅரசின் எந்தவொரு திட்டமும்தமிழகத்துக்கு பலனளிக்கவில்லை. காவிரி நீர் பிரச்னையிலும் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துவிட்டது. நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உரிமைக் குரல் கொடுத்த அதிமுக எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்துள்ளதை திரும்பப்பெற வேண்டும்.

மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம். மக்களவைத் துணைத் தலைவர் பதவியை ஏதோ சும்மா கொடுத்ததுபோல பாஜக பேசி வருகிறது ஏற்புடையது அல்ல. பொதுவாக எதிர்க்கட்சிகளுக்கு இப்பதவியை விட்டுத் தருவது வழக்கமான ஒன்றுதான்.

அடிமை போல நடத்துவதா?பொன்.ராதாகிருஷ்ணன் அதிமுகவை ஊழல் கட்சி என்றார். பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திராவிட கட்சிகளை அகற்றுவோம் என்கிறார். அக்கட்சியின் தேசிய தலைவரான அமித்ஷா தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடப்பதாக கூறினார். இதற்காக எதிர்க் குரல் கொடுப்பதில் என்ன தவறு உள்ளது.

பொறுத்துக்கொள்ள முடியாதுஇதுபோன்று விமர்சிக்க அவர்களுக்கு உரிமை இருக்கும்போது, எங்களுடைய கட்சியின்நிலைப்பாடு குறித்து, தொண்டர்களின் நிலை குறித்து கருத்து சொல்ல என்னைப் போன்றோருக்கும் உரிமை இருக்கிறது. எங்களை பொறுத்தவரை மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் நல்ல உறவு முறை இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் உள்ளபாஜக தலைவர்கள் எங்களை கொச்சைப்படுத்துகின்றனர். அவமானப்படுத்துகின்றனர். அடிமைபோல பேசிக்கொண்டிருக்கின்றனர். இதை என் போன்ற அதிமுகவினரால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close