[X] Close

வருக வருக என வரவேற்கிறோம்: பாஜக எம்.எல்.ஏ.,க்களை கலாய்த்த கர்நாடகா காங்கிரஸ் தலைவர்


we-extend-a-hearty-welcome-to-all-karnataka-bjp-mlas

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Jan, 2019 16:51 pm
  • அ+ அ-

உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன் என ட்வீட் செய்து சொகுசு விடுதியிலிருந்து திரும்பிய பாஜக எம்.எல்.ஏ.,க்களை கலாய்த்திருக்கிறார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ்.

2 சுயேட்சைகள் ஆதரவு வாபஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மூவர் மும்பை பயணம் என்று கர்நாடக அரசியலில் பரபரப்பு கூடிக் கொண்டே இருக்கும் நிலையில் சொகுசு விடுதியிலிருந்து திரும்பிய பாஜக எம்.எல்.ஏ.,க்களை கலாய்த்திருக்கிறார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி அருகே சொகுசு விடுதியில் தங்கி ஓய்வெடுத்து திரும்பியிருக்கும் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். நீங்கள் எல்லோரும் புத்துணர்ச்சி பெற்றிருப்பீர்கள். அதனால், இனி தொகுதிப் பணிகளை கவனிப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் தொகுதிகள் எல்லாம் நீண்ட நாட்களாக கவனிப்பாரின்றி கிடக்கிறது" எனக் கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார்.

முன்னதாக, கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் டெல்லி அருகே குருகிராமில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் அனைவரும் மீண்டும் கர்நாடகா அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதனை சுட்டிக் காட்டியே கர்நாடக காங்கிரஸ் தலைவர் இவ்வாறு கிண்டல் பதிவை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். கர்நாடக சட்டப்பேரவையின் பெரும்பான்மை பலம் 123 என்ற அளவில் இருக்க தற்போது ஆளும் மஜத - காங்கிரஸ் கூட்டணியில் 117 எம்.எல்.ஏ.,க்கள் இருக்கின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close