[X] Close

ஹாட்லீக்ஸ் : கிரிஜா பெயரில் கிறுகிறு மோசடி!


hotleaks-girija-vaidhya-nathan

கிரிஜா வைத்தியநாதன்

  • kamadenu
  • Posted: 16 Jan, 2019 10:02 am
  • அ+ அ-

தொழில் நகரமான திருப்பூரில் அவ்வப்போது டுபாக்கூர் ஆசாமிகள் புறப்பட்டு பண மோசடியில் ஈடுபடுவது சகஜம். 

இதுநாள் வரை, ‘வங்கிக் கடன் வாங்கித் தரப்படும், குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கும்’ என மின் கம்பங்களில் அட்டைகளை ஆடவிட்டு ஆட்டையைப் போட்டவர்கள் இப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பெயரிலேயே மோசடியை அரங்கேற்றுமளவுக்குத் துணிந்துவிட்டார்கள். 

அரசு வேலை வாங்கித் தருவதாக கிரிஜாவின் பெயரில் ஒரு பெண்ணைப் பேசவைத்து பல இடங்களில் பணத்தைக் கறந்திருக்கிறது ஒரு கும்பல்.

 இதுதொடர்பான ஆடியோ பதிவை ஆதாரமாக வைத்து மூன்று நபர்களைக் கைது செய்திருக்கும் போலீஸ், இன்னும் போலி கிரிஜாவை பிடிக்கமுடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close