[X] Close

உங்களது கலாச்சாரம் ஹிட்லர் கலாச்சாரம்!- மோடியை தாக்கிய சிபிஎம்


modi-your-culture-is-hitler-s-culture

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Jan, 2019 19:59 pm
  • அ+ அ-

உங்களது கலாச்சாரம் ஹிட்லர் கலாச்சாரம் என பிரதமர் மோடியை விமர்சித்திருக்கிறது கேரள ஆளும் கட்சி.

முன்னதாக, கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, "சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு நடந்துகொண்ட விதம் வரலாற்றில் எந்த ஒரு அரசியல் கட்சியும் அரசாங்கமும் செய்திராத மோசமான செய்கை என்றளவில் வரலாறாகும். 

கம்யூனிஸ்ட்டுகளுக்கு இந்திய வரலாறு, கலாச்சாரம், ஆன்மிகம் மீது எவ்வித மதிப்பும் மரியாதையும் இல்லை என்பது எனக்குத் தெரியும் ஆனால் அவர்களது வெறுப்பு இந்த அளவுக்கு இருக்கும் என்பதுதான் தெரியாது" எனப் பேசியிருந்தார்.

இதை மேற்கோள்காட்டி பதிலடி கொடுத்துள்ள சிபிஎம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அரசு திட்டத்தை தொடங்கிவைக்க வந்த பிரதமர் கேரள அரசை விமர்சித்தது வெட்கப்பட வேண்டியது. சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினைதான் அமல்படுத்தியிருக்கிறது. எதையும் முட்டுக் கொடுத்து பேசுவதற்கு முன்னதாக மோடி தனது பதவியேற்பின் போது சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட அரசியல் சாசனத்தைப் படிக்க வேண்டும். மனுஸ்மிருதியையும் ஆர்.எஸ்.எஸ்., உறுதிமொழியையும் வைத்து பேச வேண்டாம்.

மேலும், மோடி கலாச்சாரம், வரலாறு குறித்து இப்படி பிரசங்கம் செய்வதை நிறுத்த வேண்டும். மோடி அவர்களே உங்கள் கலாச்சாரம் ஹிட்லரின் கலாச்சாரம். அந்த வெறுப்பை வைத்துக் கொண்டு கடவுளின் சொந்த தேசத்தை தொந்தரவு செய்யாதீர்கள்" எனப் பதிவிட்டிருக்கிறது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close