[X] Close

‘‘உ.பி, பிஹாரில் பாஜக இனி ஓரிடத்தில் கூட வெல்ல முடியாது’’ - தேஜஸ்வி யாதவ் திட்டவட்டம்


tejaswi-meets-mayawati-to-call-on-akhilesh

  • நெல்லை ஜெனா
  • Posted: 14 Jan, 2019 12:53 pm
  • அ+ அ-

லக்னோ

சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியை மக்கள் வரவேற்கிறார்கள், உ.பி மற்றும் பிஹாரில் பாஜகவால் இனி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகனும், ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

வரும் மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாகவும், இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளன.

காங்கிரஸை கூட்டணியில் சேர்க்காத போதிலும், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பது என அகிலேஷும், மாயாவதியும் முடிவு செய்துள்ளனர். எனினும் இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி உ.பி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் இதேபோன்று பிஹாரிலும் பாஜகவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகனும், ராஷ்ட்ரீய ஜனதாதள மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவ் லக்னோவில் மாயாவதியை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியை மக்கள் வரவேற்கிறார்கள். இந்த கூட்டணியை பார்த்து பாஜக அதிர்ந்து போயுள்ளது. உ.பி மற்றும் பிஹாரில் பாஜகவால் இனி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. பிரதமர் மோடியால் இனிமேல் கனவில் தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும்’’ எனக் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close