[X] Close

ஹாட்லீக்ஸ் : ஓ... கதை அப்படிப் போகுதா?


hotleaks-admk

அன்வர்ராஜா எம்.பி.

  • kamadenu
  • Posted: 09 Jan, 2019 10:55 am
  • அ+ அ-

கடந்த வாரத்தில், மக்களவையில் ரஃபேல் ஊழல் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார் ராகுல்காந்தி. 

அப்போது, மேகேதாட்டு அணை விவகாரத்துக்காக அதிமுக எம்பி-க்களும் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளி செய்தனர். ஆனால், ராகுலுக்கு மத்திய நிதி அமைச்சர்  அருண்ஜேட்லி  பதிலளித்தபோது சற்றே அடக்கி வாசித்தனர்.

 சட்டென சுதாரித்துக்கொண்ட அதிமுக எம்பி அன்வர் ராஜா, தமது கட்சியின் சக எம்பிக்கள் சிலரை முதுகில் தட்டி, உரக்க கோஷம் போடவைத்தார். 

இதையெல்லாம் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் மாடத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் , “அதிமுக எம்பி-க்கள் மேகேதாட்டுக்காக கோஷம் போடல... ரஃபேல் விவகாரத்தை அடக்க பாஜகவுக்கு ஆதரவா கோஷம் போடுறாங்க” என்று சத்தமாகவே கமென்ட் அடித்தார்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close