[X] Close

10% இடஒதுக்கீடு: தேர்தலை எதிர்கொள்வதற்கான முக்கிய அறிவிப்பா?


10-quota-in-jobs-for-economically-weak-in-upper-castes-cleared-sources

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Jan, 2019 15:53 pm
  • அ+ அ-

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கும் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.  இது நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

2019 மக்களவைத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதற்காக, அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் அரசியலமைப்பு சாசன திருத்த மசோதாவாக இது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சட்ட மசோதாவை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பல காலமாகவே வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மக்களவைத் தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்பட்ட நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பறித்தது.

இதனால், மோடி அலை ஓய்ந்துவிட்டது இது மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என சலசலக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாய கடன் ரத்து உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு புதிய அணுகுமுறைக்கான வியூகத்தை வகுத்து வருகிறது.

இந்த வரிசையில்தான் தேர்தலை முன்வைத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கும் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

காங்கிரஸ் தாக்கு:

இடஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வழங்கியுள்ள இந்த ஒப்புதல் குறித்து காங்கிரஸ் கட்சியின் ஹரிஷ் ராவத், "காலம் கடந்து அளிக்கப்பட்டுள்ள நீதி. அதுவும் தேர்தல் வரும் வேளை பார்த்து அளித்திருக்கிறார்கள். ஆனால், என்னதான் மாயாஜால வாக்குறுதிகள் அளித்தாலும்கூட இந்த ஆட்சியை எதுவும் காப்பாற்றப் போவதில்லை" எனக் கூறியிருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close