[X] Close

திருவாரூர் மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான் தேர்தல் அல்ல!- தமிழிசை


thiruvarur-election-called-off-bjp-welcomes

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Jan, 2019 09:43 am
  • அ+ அ-

திருவாரூர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. திருவாரூர் மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான், தேர்தல்அல்ல என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி நடக்க இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவாரூர் தொகுதி எம்எல்ஏவும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி மறைவுக்குப்பின் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தலும், 31-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஆனால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு இன்னும் நிவாரண உதவிகள் முழுமையாகக் கிடைக்கவில்லை, நிவாரணப்பணிகள் முழுமையாக நடைபெறாமல் மக்கள் இயல்புநிலைக்குத் திரும்புவதில் இன்னும் இடர்பாடுகள் நீடிப்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்குக் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்நிலையில், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டரில்,  "திருவாரூர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. புயலுக்குப்பின்பு அங்கே தங்கி மருத்துவ நிவாவரண பணி செய்த அனுபவத்தில் சொல்கிறேன்.

திருவாரூர் மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான், தேர்தல்அல்ல. அவர்கள் வாழ்வை மீட்டெடுப்பதுதான் தேவை. ஓட்டெடுப்பு அல்ல. தேர்தல் ஆணையத்திற்கு நன்றி" எனப் பதிவிட்டிருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close