[X] Close

அரசியல் நிலைப்பாடு குறித்து பொங்கலுக்குப் பின்னர் ரஜினி அறிவிப்பு


rajini-politics

ரஜினி | கோப்புப் படம்: ஆர்.ரகு.

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 09:34 am
  • அ+ அ-

அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்த் பொங்கல் பண்டிகைக்கு பிறகு அறிவிப்பார் என ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணராவ் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த உனிசெட்டி கிராமத்தில்  ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நிதிஉதவிகள்  வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணராவ் கலந்து கொண்டு, ஏழை எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட 1,069 பேருக்கு நிதிஉதவிகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ரஜினிகாந்த் தமிழக அரசியலை மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறார். அவர் ஒரு ஞானியை போன்றவர். அனைத்தும் அறிந்தவர். நல்ல முடிவையே எடுப்பார்.  மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளார். பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு  தனது அரசியல் நிலைப்பாட்டை ரஜினி அறிவிக்க உள்ளார்.  ரஜினி வந்தால் மக்களுக்கு நல்லதையே செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close