[X] Close

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட திமுக தயங்குவது ஏன்?- மக்களவைத் தேர்தல் கூட்டணியை பாதிக்கும் என அச்சம்


thiruvarur-election

  • kamadenu
  • Posted: 06 Jan, 2019 11:52 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் கூட்டணியை பாதிக்கும் என்பதால் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட திமுக தயங்குவதாகக் கூறப்படு கிறது.

கருணாநிதி மறைவால் காலி யான திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. திமுக சார்பில் பூண்டி கே.கலைவாணன், அமமுக சார்பில் எஸ்.காமராஜ் ஆகியோர் வேட் பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட் டுள்ளது குறித்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சந் தேகங்களை எழுப்பியுள்ளன. திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் திமுகவுக்கு நெருக் கடியை ஏற்படுத்தவே திருவாரூ ருக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக வெளிப்படை யாகவே குற்றம் சாட்டியுள்ளனர்.

கஜா புயல் நிவாரணப் பணிகள் பாதிக்கும் என்பதால் திருவாரூர் இடைத்தேர்தலை தற்போது நடத்தக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் ஆணையத்திலும் மனு அளித்தார். அதன் அடிப்படையில் தேர்தலை நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து கருத்துக்கேட்டு அறிக்கை அளிக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் திருவாரூரில் நேற்று நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்ற திருவாரூரில் போட்டியிட திமுக தயங்கி வருகிறது. கடந்த 3-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “திருவாரூக்கு மட்டும் தேர்தல் நடத்துவதில் ஏதோ சூட்சமம் உள்ளது. மத்திய அரசு - தேர்தல் ஆணையம் - தமிழக அரசின் கூட்டுச்சதி உள்ளது'' என குற்றம் சாட்டியிருந்தார்.

இதைத்தொடர்ந்து திமுக தொண்டர்களுக்கு நேற்று கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின், “திருவாரூருக்கு மட்டும் தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம், புயல் நிவாரணம் வழங்க தடையில்லை என கூறியுள்ளது. இதைவிட பட்டப்பகல் பச்சை மோசடி எதுவும் இருக்க முடியாது. திருவாரூரில் திமுகவை வீழ்த்தி விடலாம் என்றும் அதன் மூலம் மக்களவைத் தேர்தல் நேரத்தில் ஒரு மாயையை உருவாக்கலாம் என்றும் மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் பகல் கனவு காண்கிறார்கள். அதற்கு தேர்தல் ஆணையம் ரகசியமாக உதவுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது'' என தெரிவித்துள்ளார்.

தோல்வி பயத்தில் அதிமுகவும், திமுகவும் திருவாரூர் இடைத்தேர்தலை கண்டு அஞ்சுவதாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுகவின் தயக்கம் குறித்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “திருவா ரூர் திமுகவின் கோட்டைதான். ஆனால், மக்களவைத் தேர்தலுக்கு 2 மாதங்கள் முன்பாக திருவாரூ ருக்கு மட்டும் தேர்தல் நடப்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்க லாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆளும் அதிமுகவும், டிடிவி தினகரன் தரப்பும் வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் கள். அதனை திமுக எதிர்கொள்வது அவ்வளவு எளிதாக இருக்காது. கருணாநிதியின் சொந்த தொகுதி என்பதால் திருவாரூரில் வென்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆர்.கே.நகர் போல ஏதாவது நடந்துவிட்டால் அது மக்களவைத் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் திமுகவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். அமமுக வென்றால் கூட்டணியே மாறும் அபாயமும் உள்ளது. எனவே தான், திருவாரூரில் போட்டியிட ஸ்டாலின் தயக்கம் காட்டுகிறார். அதனை அவர் மறைக்கவும் இல்லை” என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close