[X] Close

நீங்கள்தான் நிர்மலாஜியின் செய்தித் தொடர்பாளரோ?- ஜேட்லியை கிண்டலடித்த குஷ்பு


khushbhoo-slams-jaitley

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Jan, 2019 15:40 pm
  • அ+ அ-

நீங்கள்தான் நிர்மலாஜியின் செய்தித் தொடர்பாளரோ? என ரஃபேல் விவகாரத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை கிண்டலடித்திருக்கிறார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு.

ரஃபேல் விவகாரம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பூதாகரமாக வெடித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பாஜகவும் காங்கிரஸும் கருத்து மோதல்களில், வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன.

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிகமாக ரூ.58 ஆயிரம் கோடிக்கு விலை வழங்கப்பட்டுள்ளதாகவும் விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், ரஃபேல் போர் ஒப்பந்தம் தொடர்பாக ட்விட்டரில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு "How much does he know? When will he know?" எனப் பதிவிட்டிருந்தார்.

ராகுல் காந்தி எதைப் பேசினாலும் "How much does he know? When will he know?" என்ற தலைப்பில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஏதாவது பதிலிடுவது ஜேட்லியின் வழக்கம். ரஃபேல் விவகாரத்தில் ட்விட்டராட்டி ஒருவர் கேள்வி எழுப்பியதற்கும் இதே பதிலை பதிவிட்டிருந்தார். ரஃபேல் விவகாரத்தில் பெரும்பாலும் நாடாளுமன்றத்தில் ஜேட்லியே பதிலளிப்பதால் அந்த நெட்டிசன் உங்கள் இலாகா என்னவென்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனை சுட்டிக் காட்டிய குஷ்பு, "உங்கள் இலாகா வேலைகளை நீங்கள் எப்போது கவனிப்பீர்கள்? பாதுகாப்பு அமைச்சர் எப்போது பேசுவார். நீங்கள்தான் நிர்மலாஜியின் அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளரா" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close