[X] Close

முதலில் என் சாதிக்காரர்கள் அப்புறம்தான் மற்றவர்கள்!- ராஜஸ்தான் அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு


rajasthan-minister-says-her-first-duty-towards-her-caste

  • பாரதி ஆனந்த்
  • Posted: 01 Jan, 2019 13:30 pm
  • அ+ அ-

ராஜஸ்தான் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் பொது நிகழ்ச்சியில் சாதி ரீதியாக பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

மமதா பூபேஷ் என்ற அந்த அமைச்சர் ஆல்வார் மாவட்டம் ரேனி பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசுகையில், "எனது சாதி மக்களின் மேப்பாட்டுக்காக பணி செய்வதே எனது முதல் கடமை. அதன் பின்னரே பெரும்பான்மை சமூகத்துக்காக நான் பணியாற்ற முடியும். இருந்தாலும் அனைவருக்கும் பணியாற்ற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்" என்று பேசினார்.
பொது நிகழ்ச்சியில் அமைச்சர் ஒருவர் சாதிய ரீதியாக பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இவற்றில் காங்கிரஸ் 99 இடங்களையும் பாஜக 73 இடங்களையும் பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்களையும் பாரதிய ட்ரைபல் பார்ட்டி 2 தொகுதிகளிலும் ராஷ்ட்ரீய லோக்தந்த்ரிக் கட்சி 3 இடங்களிலும் சுயேச்சைகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஆட்சி அமைத்த சில நாட்களிலேயே சாதிப்பூச்சுடனான பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close