[X] Close

ஹாட்லீக்ஸ் : தலைவர் வழியில் தளபதி!


hotleaks-dmk

மு.க.ஸ்டாலின்

  • kamadenu
  • Posted: 01 Jan, 2019 11:03 am
  • அ+ அ-

செஞ்சி திமுக எம்எல்ஏ மஸ்தான் இல்லத் திருமணவிழாவில் சமீபத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின், “இந்தத் திருமணவிழா தேர்தல் பிரச்சாரக் கூட்டமாகவும் நடைபெறுகிறது” என்று பிரகடனம் செய்தார். 

இந்த நிகழ்ச்சியில் திமுக தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா 10 லட்ச ரூபாயைத் தேர்தல் நிதியாக ஸ்டாலினிடம் வழங்கினார். 

கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரியில் செஞ்சியில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட கருணாநிதி, “இங்கிருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன்” என அறிவித்தார். 

அப்போது, மாவட்ட விவசாய அணியைச் சேர்ந்த கண்ணன், கருணாநிதியிடம் தேர்தல் நிதியாக ஒரு லட்ச ரூபாயை அளித்தார். அந்தத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தது. இதைச் சுட்டிக்காட்டும் செஞ்சி உடன்பிறப்புகள், “தலைவர் வழியில் இப்போது தளபதியும் செஞ்சியில் வைத்து தேர்தல் நிதியைப் பெற்றிருக்கிறார். நிச்சயம் திமுகவுக்கு வெற்றிமுகம்தான்” என்று சிலாகிக்கிறார்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close