[X] Close

மக்களவை தேர்தலில் பாஜக பலமான கூட்டணி அமைக்கும்: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை


tamilisai-soudarrajan

  • kamadenu
  • Posted: 31 Dec, 2018 11:04 am
  • அ+ அ-

மதுரை

மக்களவைத் தேர்தலில் பாஜக பலமான கூட்டணி அமைக்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:

புயல் பாதித்த பகுதிகளுக்கு மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் ரூ.170 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். மத்திய அரசின் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.6300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை சீமான் குறை சொல்வது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. தமிழகத்தில் பல கட்சிகள் மக்களைப் பற்றி சிந்திக்காமல் பாஜகவைப் பற்றி சிந்திப்பதையே கொள்கையாக வைத்துள்ளன.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்கின்றனர். ஒவ்வொரு பிரச்சினைக்கும் பதவி விலக வேண்டும் எனக்கேட்பது நியாயமற்றது. அப்பாவி கர்ப் பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியது மன்னிக்க முடியாத குற்றம்.

மக்களவைத் தேர்தலில் பாஜக பலமான கூட்டணி அமைக்கும். இப்போது பூத் கமிட்டி வாரியாக கட்சியைப் பலப்படுத்தி வருகிறோம். திமுக, காங்கிரஸ் கூட்டணி பலவீனமான கூட்டணி. பலமான கூட்டணி அல்ல. காங்கிரஸ், திமுக எதிர்ப்பு கட்சிகளுடன் தான் பாஜக கூட்டணி அமைக்கும்.

முத்தலாக் சட்டம் குறித்து மக்களவை அதிமுக உறுப் பினர் அன்வர் ராஜா தெரிவித்த கருத்துக்கள் துரதிருஷ் டவசமா னது. முத்தலாக் சட்டம் முஸ்லீம் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டம். பலர் முத்தலாக் சட்டத்தை ஆதரிக்கின்றனர்.

இவ்வாறு தமிழிசை தெரி வித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close