[X] Close

ஜெயலலிதா வழியில் கூட்டணி அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்


sellur-raju

  • kamadenu
  • Posted: 31 Dec, 2018 10:54 am
  • அ+ அ-

திருச்சி

கூட்டணி குறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா எப்படி முடிவெடுத்தாரோ, அது போன்றதொரு முடிவு தேர்தல் நேரத்தில் எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

இதுகுறித்து, திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து அதிமுக கவலைப்படவில்லை. தற்போது மக்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். 

தேர்தல் வரக்கூடிய நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம். பாஜகவுடனான கூட்டணிக்கு அதிமுக அமைச்சர்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும், எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறுவது கற்பனையானது. அதிமுகவை பொறுத்தவரை, கூட்டணி குறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா எப்படி முடிவெடுத்தாரோ, அது போன்றதொரு முடிவு தேர்தல் நேரத்தில் எடுக்கப்படும் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close