[X] Close

விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்காத மத்திய அரசு: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு


evks-ilangovan-interview

ஈரோடு மாநகர, மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

  • kamadenu
  • Posted: 31 Dec, 2018 10:51 am
  • அ+ அ-

ஈரோடு

கடந்த நான்கரை ஆண்டாக தொடரும் மத்திய அரசு, விவசாயி களின் கடன் பிரச்சினை உட்பட எதையும் தீர்க்கவில்லை. என, தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோடு மாநகர, மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைச் கூட்டம் மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரும் முன்பே, இதேபோல் பல புகார் வருகிறது. இதற்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில், 13 மாவட்டங்களில் உயர் மின் கோபுரங்களுக்கு எதிராக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட தயாராக இல்லை. இதற்கெல்லாம் மக்கள் உரிய நேரத்தில் பாடம் புகட்டுவர். கடந்த நான்கரை ஆண்டாக தொடரும் மத்திய அரசு, விவசாயிகளின் கடன் பிரச்சினை உட்பட எதையும் தீர்க்கவில்லை. வரும் மக்களவைத் தேர்தலில், மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும், என்றார்.

முன்னதாக நடந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் பேசினார். கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close