[X] Close

அதிமுகவுடன் இணைப்பு என்பது கட்டுக்கதை: அமமுக கர்நாடக செயலர் புகழேந்தி தகவல்


connection-with-aiadmk-is-a-myth

புகழேந்தி: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 31 Dec, 2018 10:41 am
  • அ+ அ-

அமமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: தொடக்கம் முதலே செந்தில் பாலாஜி கரூரில் நடத்திய எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொண்டதில்லை. தொண்டர்கள், மக்கள் என யார் அழைத்தாலும் அவர் சரியாக பதில் அளிக்க மாட்டார். போகப் போக திமுகவினரும் அதை உணர்வார்கள். அவரை வைத்து கரூரில் கட்சி நடத்த வேண்டிய நிலையில் திமுக உள்ளதை நினைத்தால் வேடிக்கையாக உள்ளது.

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தயார் என எங்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கூறியிருக்கிறார். அதற்காக மதச் சார்பற்ற கட்சிகள் சேர்ந்து வருகின்றன. நிச்சயம் எங்கள் கட்சி தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும். அதிமுக-அமமுக இணையப்போகிறது என கூறி வருகின்றனர். இது வேண்டுமென்றே கூறப்படும் கதை. எங்களின் வளர்ச்சியை குறைப்பதற்காக கூறப்படும் திட்டமிட்ட சதி. எங்களோடு இதுவரை யாரும் பேச்சுவார்த்தை நடத்த வில்லை. நாங்களும் யாருடனும் பேச்சு நடத்தவில்லை. எந்த தொண்டனும் அதுபோன்ற பேச்சுவார்த்தையை விரும்பவில்லை. அவர்களோடு கூட்ட ணியோ, பேச்சு நடத்தவோ கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close