[X] Close

மக்களவைத் தேர்தலில் ஒருமித்த கட்சிகளுடன் கூட்டணி: அன்புமணி ராமதாஸ் தகவல்


anbumani-ramadoss

  • kamadenu
  • Posted: 31 Dec, 2018 10:31 am
  • அ+ அ-

கோவை

வரும் மக்களவைத் தேர்தலில் ஒருமித்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பாமக தலைமை சிறப்பு செயற் குழுக் கூட்டம் கோவையில் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இதில், கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் ஒருமித்த கருத்துகள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், இது தொடர்பாக முடிவெடுக்க பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாநில நலன் மற்றும் விவசாயிகள், இளைஞர்கள் நலனைக் கருத்தில்கொண்டு கூட் டணி குறித்து நல்ல முடிவெடுக்கப் படும். கூட்டணி தொடர்பாக இதுவரை எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

மத்தியில் ஏற்கெனவே இருந்த அரசும், தற்போதுள்ள அரசும் தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து, தொடர்ந்து வஞ்சித்தே வந்துள்ளன. மீனவர்கள், இலங் கைத் தமிழர்கள், மேகேதாட்டு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.

தமிழத்தின் உரிமைகள் பாது காக்கப்பட வேண்டும். தமிழகம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினை களிலும் காங்கிரஸும், பாஜகவும் ஒரே நிலைப்பாடுதான் கொண்டுள் ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். இதன் மூலம், தமிழகத்தின் சாகுபடிப் பரப்பு 60 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கும். குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுவதுடன், கிராமங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை யும் குறையும்.

சட்டப்பேரவை புத்தாண்டு கூட்டத் தொடரில், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேகேதாட்டு அணை, காவிரி மேலாண்மை வாரியம், கஜா புயல் நிவாரணம், விளை நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை, சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டம், அத்திக்கடவு-அவி நாசித் திட்டம் உள்ளிட்ட பிரச் சினைகள் தொடர்பாக தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close