[X] Close

எனது நிலத்தை அபகரிக்க முயற்சிக்கிறார்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது தா.பாண்டியன் குற்றச்சாட்டு


minister-dindigul-c-sreenivasan-tries-to-grab-my-land-d-pandian

  • kamadenu
  • Posted: 31 Dec, 2018 10:13 am
  • அ+ அ-

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எனது பட்டா நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார், என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மூலக்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:விவசாய நிலங்கள் வழியாக மின் கோபுரம் அமைக்க அரசு முயற்சித்து வருகிறது. 13 மாவட்ட விவசாயிகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இந்த மின் வழித்தடத்தை ஆழமாக குழி தோண்டி புதைத்து கொண்டு செல்லவேண்டும். வளர்ந்த நாடுகளில் இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது. சென்னையிலும் புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டும்போது இந்த முறையைப் பின்பற்றுகின்றனர்.

உலக வங்கி உதவியுடன் அம்பத்தூரில் புதிய நகரை ஒரு ஏரியை மூடி உருவாக்குகின்றனர். அதிலும் மின்கம்பங்கள் பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருக்கிறது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறார்கள்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எனது பட்டா நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார். தனது மருமகனுக்காக தமிழ்நாட்டையே பட்டா போட்டு தரட்டும். அத்துமீறி என் சொந்த நிலத்தில் நுழைந்தால் காவல்துறையையும் சந்திப்போம், சீனிவாசன் போன்றவர்களையும் எதிர்கொள்வோம். தனியார் நிலத்தில் நுழைந்ததற்காக அவர் மீது வழக்குப் போட வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்ததாக திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். யார், எப்போது கொலை செய்தார்கள் என்பதை அவர் விளக்க வேண்டும். அவரிடம் ஆறுமுகசாமி கமிஷன் விசாரிக்க வேண்டும் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close