[X] Close

ஹாட்லீக்ஸ் : சும்மாவே எரியுது... இது வேறயா?


hotleaks-bjp

வானதி சீனிவாசன்

  • kamadenu
  • Posted: 28 Dec, 2018 09:47 am
  • அ+ அ-

இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காக கோவையில் மக்கள் சேவை மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பாஜகவின் வானதி சீனிவாசன். 

இதன் ஒருபகுதியாகக் கடந்த வாரம், கோவை இந்துஸ்தான் கல்லூரியில் தனியார் கம்பெனிகளை வரவழைத்து, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திருவிழாவை நடத்தினார். 

இதில் 20 ஆயிரம் இளைஞர்கள் கலந்துகொண்டதாக தம்பட்டம் அடிக்கிறது பாஜக. 

ஆனால், எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்ற விவரம் கேட்டால்... சொல்வதற்கு ஆளில்லை. 

கோவை மக்களவைத் தொகுதியை குறிவைத்தே காரியம் ஆற்றுவதாக ஏற்கெனவே வானதிக்கு எதிராக சி.பி.ராதாகிருஷ்ணன் தரப்பு எரிந்து கொண்டிருந்தது.

 அதற்கு நெய்வார்க்கும் விதமாக இப்போது இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்திருக்கிறார் வானதி. 

க்ளைமாக்ஸ் என்னாகுமோ?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close